• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செங்கழுநீர் அம்மன் ஆலய விழா கொடியேற்றம்..,

ByB. Sakthivel

Aug 7, 2025

புதுச்சேரி வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழுநீர் அம்மன் ஆலய ஆடி பெருவிழா கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் அருள்மிகு செங்கழுநீர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த அருள்மிகு செங்கழுநீர் அம்மன் தேரோடும் வீதியில் வீதி உலா நடைபெற்றது, விழாவில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மேலும் விழா நாட்களில் செங்கழுநீர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனம் சிம்மவாகனம் யானை வாகனம் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாளிக்க உள்ளார்.

ஆடி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் ‌செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து அம்மனுக்கு தெப்பல் உற்சவம் மற்றும் முத்து பல்லாக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி சுரேஷ் உள்ளிட்ட மக்கள் பாதுகாப்பு குழுவினர், கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.