கோவையில் சமூக நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சேவைகள் செய்யும் விதமாக அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தை இளைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்…

மருத்துவம்,கல்வி,மற்றும் சமூக நல பணிகளில் கவனம் செலுத்தும் விதமாக துவங்கப்பட்டு அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் முதல் சமூக பணி துவக்க நிகழ்வு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்டார் சிறப்பு குழந்தைகள் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது..
டிரஸ்டின் நிறுவனர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இதில் நிர்வாக அறங்காவலர்கள் நாகராஜ் ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இதில் சிறப்பு பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு தேவையான அத்திவாசிய பொருட்களை அதியாயம் டீரஸ்ட் நிர்வாகத்தினர் வழங்கி,அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது..

இந்நிகழ்ச்சியில், அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளர் ஹேட்லீ பொருளாளர் மற்றும் அறங்காவலர்கள் கார்த்திக், வெங்கடேஷ்,சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்..
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிரஸ்ட் நிர்வாகிகள் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக ஏழை குடும்பத்தினர்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்தாலும்,மருத்துவ உதவி கிடைப்பது அனைவருக்கும் கிடைப்பது கேள்வி குறியாக உள்ளது..
எனவே மருத்துவ உதவி வழங்குவதில் எங்களது டிரஸ்ட் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)