செங்கல்பட்டு மறைமாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் பேரருட்தந்தை அகஸ்டின் தேவதாஸ் அவர்கள் கலந்து கொண்டு புனிதரின் திருக்கொடியை ஏற்றி இத் திருவிழாவினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வெள்ளி நற்கருணை விழாவும், சனிக்கிழமை இரவு திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. கொடியேற்ற விழாவில் பங்கு இறைமக்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள புனித மிக்கேல் அதிதூதரின் பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இத்திருவிழாவில் கலந்து கொண்ட அனைவரும் புனித மிக்கேல் அதிதூதரின் ஆசீரை சிறப்பாக பெறும் பொருட்டு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் பங்குதந்தை அருட்பணி இம்மானுவேல் ராஜ் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புர செய்திருந்தார்.