• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘சான்றிதழ்’ திரை விமர்சனம்

Byஜெ.துரை

Aug 7, 2023

ஜெயசந்திரன் இயக்கத்தில் ஹரி நடித்து வெளிவந்த படம் ‘சான்றிதழ்’.

இப்படத்தில் ராதாரவி, அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்க, அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள்.

இதனால் கோபமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கும் ஒரு கிராமத்துக்கு இந்திய அரசாங்கம் விருது தர முன்வருகிறது.

அதை ஏற்க மறுப்பதாலேயே, அந்தக் கிராமத்துக்கு எதிரியாகிறார் அமைச்சர்(ராதாரவி).

அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? அந்தக் கிராமம் அப்படி மாறக் காரணமானவரின் கதை என்ன? என்பது தான் சான்றிதழ் படத்தின் கதை.

வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வரும் நாயகன் ஹரிகுமார் ஒரு கிராமத்தையே முற்றிலும் மாற்றக்கூடிய நடிப்பில் அசத்தியுள்ளார்.

ஹரிகுமாரைக் காதல் காட்சிகளில் நடிக்க ரோஷன்பஷீர் ஆசிகா, அசோகன் ஆகியோரை இளம் ஜோடியாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

அமைச்சராக நடித்திருக்கும் ராதாரவிக்கு அந்த வேடம் பொருத்த காதாபாத்திரமாக உள்ளது.

அழகான கிராமத்தை உற்சாகமாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன்.

பி.ஜி.ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் சிறப்பு, பின்னணி இசையும் அருமை

மொத்தத்தில் ‘சான்றிதழ்’ படம் அந்த மாதிரி ஒரு கிராமத்தில் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.