
அகில இந்திய ஹேர் & பியூட்டி சங்கரன்கோவில் கிளை ஷிபா பார்லர் பமிலா மற்றும் நாகர்கோவில் கிளை இணைந்து நடத்தும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவிலில் உள்ள விண்மீன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சங்கரன்கோவில் கிளை மற்றும் நாகர்கோவில் கிளையின் சார்பாகமதிய உணவு உடைகள், இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களை மகிழ்விக்கும் விதமாக ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியை சங்கரன்கோவில் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து நடைபெறும் என பமீலா தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைவர் ஜான் பீட்டர், துணைத்தலைவர் நிம்மி, செயலாளர் பினு, துணை செயலாளர் பமிலா, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கீதா. ரெஜிதா, ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். பொது மக்களிடையே மிகவும் இந்நிகழ்ச்சி வரவேற்பை ஏற்படுத்தியது.
