
மதுரை அழகப்பன் நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள காந்தி தெருவை சேர்த்தவர் ஆனந்தன்.
இவரது மகன் சண்முகசுந்தரம் (வயது 62) இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக இன்று காலை 10:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் இமானுவேல் சேகரன் குருபூஜை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை முன்னிட்டு ஏராளமான கூட்டமும் பரபரப்பாக இருந்தது.
அப்போது சண்முகசுந்தரம் தனது உடமைகளை வைத்து தள்ளுபண்டியில் தள்ளி வந்து காரில் ஏற்றும்போது சூட்கேஸ் மற்றும் இதர சாமான்களை ஏற்றிவிட்டு பாஸ்போர்ட் பணம் மற்றும் ஆவணங்கள் நிறைந்த கைப்பையை தள்ளுவண்டியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
மதுரை விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த கருப்பசாமி எனும் வீரர் அதிவிரவு அதிரடிப்படை வீரர்கள் கியூ ஆர் டி டீம் )தள்ளு வண்டியில் கைப்பை இருப்பதை பார்த்து சோதனை செய்த போது சண்முகசுந்தரத்தின் பாஸ்போர்ட் மற்றும் இந்திய பணம் 38,000 சிங்கப்பூர் பணம் மற்றும் ஆவணங்கள் ஆகியவை இருந்தது .

இதனை தொடர்ந்து அவரை தொலைபேசி மூலம் அழைத்துவிமான நிலைய பயணிகள் முனைய அலுவலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் பாஸ்போர்ட் தொலைந்து மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இருந்த சண்முகசுந்தரம் விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விமானத்தில் மயக்கம் அடைந்த துபாய் பயணிக்கு சிகிச்சை அளித்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் பயணிகள் உடைமையை பத்திரமாக மீட்டுக் கொடுத்ததும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சேவை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.