• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பளம் உயர வாய்ப்பு

Byவிஷா

Jul 22, 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சம்பளம் உயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக கோடக் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
2026 ஜனவரி மாதத்தில் இருந்து 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், தற்போதைய ஊழியர்களுக்கு சராசரியாக 12சதவீதம் முதல் 13சதவீதம் வரை சம்பள உயர்வு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் பெற்றுவரும் ஊழியர்களுக்கு, 8வது சம்பள கமிஷன் அமலாகும் போது அது 32,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
7வது சம்பள கமிஷனில் இருந்தது போலவே, 8வது கமிஷனும் ஒரு “ஃபிட்மண்ட் ஃபேக்டர்” அடிப்படையில் புதிய சம்பளத்தை நிர்ணயிக்கலாம். தற்போது 2.57 ஆக உள்ள இந்த எண்ணிக்கை, 1.8 ஆக குறைக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது சம்பளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதைக் குறிக்கிறது.
மத்திய அரசு, 8வது சம்பள கமிஷன் மூலம் அகவிலைப்படி என்ற கருத்தையே முழுமையாக நீக்க திட்டமிட்டிருப்பதாகவும் சில செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய மாதிரிப் பணி சம்பள அமைப்பில், தானாகவே விலை உயர்வுகளுக்கு ஏற்ப சம்பள உயர்வுகள் ஏற்படும் விதமாக மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு கோடக் நிறுவன அறிக்கையில் பல தகவல்கள் வெளியாகியிருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து இணையான அல்லது அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை. எனவே ஊழியர்கள் இன்னும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர். 8வது சம்பள கமிஷன் தொடர்பான செய்திகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.