ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கூர் செல்லும் சாலையில் B.S.N.L அலுவலகம் அமைந்து உள்ளது. குறிப்பிட்ட அலுவலகத்தின் மாடியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டவரை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அதிக காற்றழுத்த பகுதியான ஆரல்வாய்மொழி கணவாய் பகுதியில்
தினம் காற்றின் தன்மை அதிகமாக இருக்கும் இந்த பகுதியில், குறிப்பிட்ட டவர் கட்டிடத்தின் மாடியில் குறுக்குவாட்டில் கட்டப்பட்ட இரு கான்கிரீட் தூண்கள் மீது அமைக்கப்பட்டு உள்ளது. காற்றின் தாக்கத்தால் இந்த டவரின் அசைவால் இந்த கான்கிரீட் தூண்கள் சேதம் அடைந்து எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த தூண்கள் தங்கள் தாங்கும் திறனை இழந்து உள்ளதோடு எப்போதும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

அதுபோல் குறிப்பிட்ட டவர் காற்றில் வேகத்தால் வளைந்து காணப்படுகிறது. இருந்தும் இதனை சரிப்படுத்த இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள டவர் எமனின் தூதுவனாகவே எல்லேராலும் பார்க்கப்படுகிறது. இப்பகுதி காற்று அதிக அளவில் வீசும் பகுதி என்பதால் இங்குள்ள டவர் எந்நேரத்திலும் எத்திசையிலும் விழும் அபாயம் உள்ளது. சுற்றியுள்ள பகுதிகள் குடியிருப்பு சூழ்ந்த பகுதி என்பதால் ஏதாவது விபத்து விபத்துப்பட்டால் உயிர் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே இத்தகைய ஆபத்து நேரிடுவதற்கு முன்பாக பாதிப்பு அடைந்த நிலையில் உள்ள டவர் நிற்கும், தாங்கு தூண்களை சீரமைப்பதோடு காற்றால் சேதம் அடைந்த டவரையும் சீரமைக்க போர்கால கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
