நேற்று மாலை டெல்லி சாலிமார் பாக் பகுதியில் ஒரு பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், திடீரென அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
இதனால் செல்போனுடன் சேர்த்து அந்த பெண்ணை நடுரோட்டில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். அவர் சாலையில் விழுந்ததும், குற்றவாளிகள் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது.