விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி. கொட்டாரத்தில் ஒன்றியச் செயலாளர் பா.பாபு தலைமையில் திமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் கொட்டாரம் சந்திப்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் வைகுண்ட பெருமாள், காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர் முருகேசன், திமுக நிர்வாகிகள் கே.முத்துசுவாமி, பொன் ஜான்சன், இ.எம்.ராஜா, எஸ்.அன்பழகன், சகாயஆன்டனி, பிரேம் ஆனந்த், வினோத், மதி, பொன்முடி, தாமரை பிரதாப், ரூபின், முத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், இசக்கி பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.