சென்னை – எழும்பூர் ஹஜ்ரத் மோத்தி பாபா தர்காவில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மீலாது விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மவுளுத் ஷரீஃப் ஓதப்பட்டு உலக மக்கள் அமைதிக்காக துவா செய்யப்பட்டது.

பகல் புனித பாத்தியா ஹஜ்ரத் மோத்தி பாபா தர்கா முத்தவல்லி மெய்நித்தின் அவர்களால் ஓதப்பட்டது, திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டர். அனைவருக்கும் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது, , தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல் அசோசியேசன் தலைவர் செய்யது முஹம்மத் கலீபா சாகிப், செயலாளர் முசம்மில் ஜாஃபர், பொருளாளர் அபு மூசா, ஷா நவாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழகமெங்கும் உள்ள தர்காக்கள் பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.