• Tue. Feb 18th, 2025

என்னை அறிந்தால் விக்டர் பிறந்தநாள் கொண்டாட்டம்

“நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், போலீஸ் கதாபாத்திரத்தில் செம ஸ்டைலீஷ் ஆக அஜித்தும், வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருந்தனர். இவர்களுடன், இந்தப் படத்தில் த்ரிஷா, அனுஷ்கா ஷர்மா, ஆசிஷ் வித்யார்த்தி, கலை இயக்குநர் ராஜீவன், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் என்னை அறிந்தால் படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை நடிகர் அருண் விஜய், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், எடிட்டர் ஆண்டனி பங்கேற்று கேக் வெட்டினர்.

நடிகர் அருண் விஜய், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கேக் ஊட்டி விட்டார். இந்த புகைப்படங்களை அருண் விஜய் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து.

“விக்டர் பிறந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. நடிகர் அஜித் குமாருக்கும், இயக்குநர் கௌதம் மேனனுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.