• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

ByN.Ravi

Jul 31, 2024

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலங்காநல்லூர் குறுவட்ட விளையாட்டு போட்டி தடகள போட்டி உள்பட பல்வேறு வகையான போட்டிகள் நேற்று 30ந்தேதி முதல் ஆகஸ்ட் 29ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியினை, உதவித் தலைமை ஆசிரியர் விஜயரங்கன் தலைமை
தாங்கி தொடங்கி வைத்தார். தாய் பள்ளி முதல்வர் ஜெகதீசன், நிர்வாக அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,முதல் போட்டி நேற்று தாய் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கேரம் மற்றும் வலைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்ட,
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையா டினர். இதன் ஏற்பாடுகளை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சாம்சுதீன் உடற்கல்வி ஆசிரியர்
சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.