நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஜார் பகுதியில் நேசமணி என்பவர் கோத்தகிரி நகர் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு மீண்டும் அவரது கிராமத்திற்கு செல்லும் போது அவரது கிராமமான தவிட்டுமேடு பகுதியில் இறங்காமல் பேருந்து இயங்கி செல்லும் போது அரவேனு பகுதியில் இறங்கியபோது பேருந்தின் பின் சக்கரத்தில் இடது கால் சிக்கிய சிசிடிவி கேமரா பதிவு தற்போது வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்க கூடிய அரவேனு பகுதியில் நேற்று மாலை தவிட்டு மேடு பகுதியை சேர்ந்த நேசமணி என்பவரின் இடது கால் மீது அரசு பேருந்து ஏறி இறங்கி விபத்து ஏற்பட்டது.இதில் நேசமணிக்கு இடது காலில் எலும்பு முறிவு,உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினரின் முதற்க்கட்ட விசாரணையில் நேசமணி நேற்று கோத்தகிரி நகர் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு மதுபோதையில் கோத்தகிரியில் இருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் ஏறிய தாகவும்,தனது கிராமமான தவிட்டுமேடு பகுதியில் இறங்காமல் பேருந்து அரவேனு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்து நிற்காத நேரத்தில் இறங்கியதில் பேருந்தின் பின் சக்கரத்தில் அவரது இடது கால் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடது காலில் எலும்பு முறிவுகள் மற்றும் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.