தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் எழுத்தறிவு பெற்ற மக்கள் என்பது ஒரு தனித்த புகழ். இந்த நிலைக்கு அடிப்படை காரணம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில். பல்வேறு கிறிஸ்தவ மிஷனரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்விக் கூடங்களை உருவாக்கி பொதுவாக அனைவருக்கும் கல்வியை போதித்தார்கள். அந்த வழியில் கிறிஸ்தவ கன்னியர்கள், பாதிரியார்கள் நிர்வாகத்தில் பள்ளி,கல்லூரிகளை உருவாக்கி மதம், இனம் கடந்து அனைவருக்கும் கல்வி என்ற பொது நிலையில் கல்விப் பணியை ஒரு மக்கள் சேவையாக செய்து வந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக தனியார் நிறுவன பள்ளி,கல்லூரிகள் அமைந்த வரிசையில். தமிழக அரசின் முன்னாள் நிதி அமைச்சக துணை அமைச்சராகவும் பின்னர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த நாஞ்சில் வின்சென்ட். 11_ஆண்டுகளுக்கு முன். சுக்கான் கடை பகுதியில், வின்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தினுள் தொடங்கிய வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்சி பள்ளி ஒவ்வொரு ஆண்டும்
12_ம் வகுப்பு (CBSE Board, ) தேர்வு JEE ,தேர்வுகளில் இப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று குமரி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற பள்ளியாக திகழ்கிறது.

இப்பள்ளியின் 11_வது ஆண்டு விழா டாக்டர் எம்ஜிஆர் கலையரங்கத்தில்நடைபெற்றது. நிகழ்வுகள் நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சந்திரசேகர், பள்ளியின் நிர்வாகி திருமதி சரோஜா வின்சென்ட் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
பள்ளி மாணவிகள் பங்கேற்ற அழகான பரதநாட்டியம் நிகழ்வும்,இப்பள்ளியை சேர்ந்த மாணவி தேசியஅளவில் நடைபெற்ற பரதநாட்டியம் போட்டியில் முதல் இடம் பிடித்த
அதிதி சந்திரசேகரின் தனித்த பரதநாட்டியம் நிகழ்வில் அவர் வெளிப்படுத்திய பாவங்கள் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்தது என்பதை பார்வையாளர்கள் எழுப்பிய கை ஒலி ஓசையே அடையாளம்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர்.
வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்செலன்சியி வெளிப்படுத்தும் தேர்வு முடிவுகள். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனுக்கு அடையாளம் என்று தெரிவித்ததுடன். கடந்த ஆண்டு வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்செலன்சியில் பயின்ற நீட் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்று, தற்போது வெல்லூர் சி.எம்.சியில் மருத்துவம் பயின்று வரும் மாணவியை பாராட்டி சிறப்பு கேடயத்தை பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி தாளாளர் நாஞ்சில் வின்சென்ட். தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற மாணவர் ஆம்ரிக்,செஸ் போட்டியில் வென்ற ஏமிஹாரிஸ் ஆகியோருக்கு வெற்றி கோப்பையுடன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

பள்ளி நாட்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காது, பள்ளி நாட்களில் வகுப்பு வந்த இருபால் மாணவ,மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. வாழ மேடையில் சிறுவர், சிறுமிகள் பல்வேறு வண்ண உடைகளில் வந்து பரிசு பெற்ற காட்சி வண்ணத்துப்பூச்சிகள்,கண் சிமிட்டி சிறகுகள் விரித்து பரப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.








