• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 4 சிறார்களிடம் சிபிசிஐடி விசாரணை..

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை.

விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள்.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மைதிய சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தினர். வன்கொடுமை நடந்த மருந்து குடோனுக்கு அழைத்து சென்று ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில், போதை மாத்திரை, போதை ஊசிகளை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில், விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடந்த நிலையில், பள்ளி மாணவர்களையும் விசாரித்து வருகிறது சிபிசிஐடி. மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைத்து மாணவர்கள் 4 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக்காக கூர்நோக்கு இழைத்தால் இருந்து 2 மாணவர்கள் மதுரை அழைத்துவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.