விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்நது இயக்குநருக்கு காஸ்ட்லியான் கிப்ட்ஒன்றை பரிசளித்துள்ளார் கமல்
கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
விக்ரம் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ், இந்தி,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நன்றி தெரிவித்து கமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.மேலும் படத்தில் தன்னுடன் நடித்த பகத்பாசில்,விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து நடிகர் கமல் விக்ரம் படத்தின் இயக்குநருக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். நேற்றிரவு படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடினார் கமல்.பின்பு லோகேஷ்க்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக கமல் lexus காரைபரிசாக கொடுத்துள்ளார்.இந்த காரின் ஆரம்ப விலை65 லட்சம் ஆகும் .விக்ரம் படம் நாட்களில் உலக முழுவதிலும் 150 கோடிக்கு மேல் வசூல் செய்தி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.