நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியம் என்பவர் மகன் முத்து செல்வன். இவரும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததை அந்த வழியாக காரில் வந்த செல்வ கருணாநிதி, முத்து செல்வன் மீது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த முத்து செல்வன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து களக்காடு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




