• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட்டை எதிர்த்து வழக்கு…,

ByS.Ariyanayagam

Mar 6, 2026

திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக சுமார் 65 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் வத்தலகுண்டு பைபாஸ்-ல் இருந்து பழனி பைபாஸ் செல்லும் சாலையில் அமைப்பதற்கு ஒப்பந்தமும் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பகுதி நூறாண்டுகளுக்கு மேலாக தோல் தொழிற்சாலையில் வெளியேறிய அமிர்தன்மையாலும் உப்பு மண்ணாகவும் மாறி உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறிவந்த நிலையில்,
புதிய பேருந்து நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் தண்ணீராலும் அசுத்த காற்று மூலமாகவும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

உடனடியாக புதிய பேருந்து நிலையம் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது