• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மூதாட்டி மீது கார் மோதி விபத்து..,

BySeenu

Jun 5, 2025

கோவை கோவில்பாளையம், வி.ஐ.பி., கார்டனை சேர்ந்த அழகர்சாமி மனைவி சசிகலா, 75. இவர் நேற்று காலை 9:00 மணிக்கு, கோவில்பாளையம் சத்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் சசிகலா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட சசிகலா சாலையோரம் பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ‌ இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது. தெரிய வந்தது. மேலும் சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.