• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீங்களே இப்படி பண்ணலாமா… அமைச்சரை வறுத்தெடுத்த திமுக எம்.பி

தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ள கே.என். நேரு நான்கு முறை எம்.எல்.ஏ வாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாகவே திமுக சமத்துவம் மற்றும் சுயமரியாதையை பேசும் காட்சியாகவே தன்னை முன்னிலைபடுத்தி வருகிறது. இன்று காலை முதலே அமைச்சர் கே.என். நேரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக நேரு, தன் அருகில் சோபா இருந்தும் சாமியாரின் முன் தரையில் அமர்ந்து இருந்தார்.

இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் “சுயமரியாதை எல்லாம் மாநாட்டில் மட்டும்தான்”, “இது மக்களை அவமதிக்கும் செயல்”, “சுயமரியாதை பேசும் கட்சி இப்படி செய்யலாமா” என்று இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இந்த விசயத்திற்கு சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.