• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை ரெசிடென்சி ஓட்டலில் கேக் மிக்சிங் திருவிழா

BySeenu

Oct 5, 2024

ஸ்காட்லாந்து நாட்டின் வீரர்கள் போன்று உடையணிந்து பிரம்மாண்ட பேரலில் வந்த ஒயின், விஸ்கி, ரம், பிராந்தி கலவை

ரெசிடென்சி ஓட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சியில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவக்கம்.

டிசம்பர் மாதத்தில் கோலாகலமாக கொண்டாடபடவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள,ரெசிடென்சி ஓட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

இதில் கேக் தயாரிக்க 500 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலக்கும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரெசிடென்சி ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள்,வாடிக்கையாளர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இது குறித்து ரெசிடென்சி ஓட்டலின் செயல் இயக்குனர் சார்லஸ் ஃபேபியன் மற்றும் தலைமை சமையல் கலை வல்லுனர் முகம்மது ஷமீம் ஆகியோர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும்,இந்த ஆண்டு ஐநூறு கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

குறிப்பாக கேக் தயாரிக்க பயன்படும் கலவைகளில் முக்கியமான ஒயின், பிராந்தி, ரம், விஸ்கி போன்ற திரவங்களை ஒரு பிரம்மாண்ட பேரலில் ஸ்காட்லாந்து வீரர்கள் போன்ற உடையணிந்த வீரர்கள் எடுத்து வந்து கேக் மிக்சிங்கில் கலந்த்தாக அவர் தெரிவித்தார்.