மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் கிராம வளர்ச்சிக்காக கிராம தலைவராக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக சங்கரய்யர் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் கிராமத் தலைவர் ராஜமாணிக்கம் மறைந்ததை அடுத்து கிராம தலைவரை தேர்வு செய்ய கூட்டம் முள்ளிபள்ளம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

இதில் ஏகமனதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேபிள் ராஜா தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக சங்கரய்யர் தேர்வு செய்யப்பட்டார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட கேபிள் ராஜாவிற்கு அவரது நண்பர்கள் உறவினர்கள் கிராமத்தினர் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கிராம வளர்ச்சிக்கான ஒரு பகுதியாக முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
12 கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்கள் நடைபெறா வண்ணம் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று தேர்வு செய்யப்பட்ட கிராமத் தலைவர் கேபிள் ராஜா உறுதியளித்தார். மேலும் கிராம வளர்ச்சிக்காக தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.











; ?>)
; ?>)
; ?>)