• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் இடைத்தேர்தல்

Byவிஷா

Jun 11, 2024

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி 13 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்குதல் ஜூன் 14ம் தேதி தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 21.
இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூலை 13ம் தேதி அறிவிக்கப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, பீகாரில் ரூபாலி, ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தாலா (மேற்கு வங்காளம்), இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நலகர், டேரா, ஹமிர்பூர், பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதி, உத்தரகாண்டில் உள்ள மங்களூரு மற்றும் பத்ரிநாத், மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்வாரா ஆகிய 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.