



தமிழகத்தில் அனைத்து மக்களின் விழாவான”தீபாவளி”விழா கொண்டாட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்தங்களுடன் தீபாவளி கொண்டாடிய பின் மீண்டும் பணி இடங்கள், வியாபார மையங்கள், அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் அவர்களின் பணி இடங்களுக்கு செல்ல, குறிப்பாக குமரியில் இருந்து சென்னை செல்ல அதிகமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவது போல் சென்னைக்கு அடுத்ததாக கோயம்பத்தூருக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில், பயணிகளின் வருகைக்காக பேருந்துகள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது.

கடந்த காலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் பணி நாள் என்ற நிலையில் பெரும் எண்ணிக்கையில் பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலை மோதிய நிலை இன்று இல்லை தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறையை தமிழக அரசு அனுமதித்த நிலையில். நாகர்கோவிலில் பேருந்து நிலையத்தில் பெரிய கூட்டம் அலைமோதாது.பயணிகள் நெருக்கடி இன்றி வசதியாக பொதுமக்கள் அவர்களின் பயண ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காண முடிந்தது.


