தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள K. துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டியில் பந்தயம் நடைபெற்றது, பூஞ்சிட்டு, தேன்சிட்டு,தட்டான்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர், திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 66 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

கொடியசைத்தவுடன் சீறிப்பாய்ந்த பெரும்பாலான மாட்டு வண்டிகள் மக்களின் கூட்டத்திற்கு நடுவே சென்றதால், பந்தயத்தை பார்க்க வந்திருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர், அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு,விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை சூழல் கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
அப்போது தட்டான் சிட்டு,போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு இரண்டு பல்லுக்கு பதிலாக அதிக அளவில் பல்லுகள் இருந்ததாலும்,தேன்சிட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு நான்கு பல்லுக்கு பதிலாக அதிக அளவில் பல்லுகள் இருந்ததாலும், விழா கமிட்டினருக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து காவல்துறையினர் சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற மாட்டின் பல்லுகளை விழா கமிட்டியினர் சரி பார்த்த பின்பு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது,
இதை அடுத்து காவல்துறையினர் சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற மாட்டின் பல்லுகளை விழா கமிட்டியினர் சரி பார்த்த பின்பு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.” அதிகாரிகள் மத்தியில் கேள்வி கனைகளாக உள்ளது .