• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தொழிலாளர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது !!!

BySeenu

Jan 31, 2026

தீபாவளி சீட்டு நடத்தி தொழிலாளர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தார்.

மேலும் மதுரை மேல சக்குப்பட்டியை சேர்ந்தவர் மூக்கன். உட்பட இவரது உறவினர்கள் பலர் கோவை சின்ன தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களை அணுகிய மயில்சாமி தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், வாரம் ரூபாய் 2,000 வீதம் 52 வாரங்களுக்கு கட்டினால் நல்ல லாபம் தருவதாக கூறி உள்ளார். இதை அடுத்து 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணம் செலுத்தினர். இந்த சீட்டு நடத்துவதில் மலைச்சாமிக்கு உதவியாக அவரது சகோதரர் ராஜ்குமார் இருந்து உள்ளார். காலக்கெடு முடிந்த பிறகு மலைச்சாமி யாருக்கும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை, சகோதரர்கள் இருவரும் பணத்தை கொடுக்காமல் 2016 ஆம் ஆண்டு பிறந்த ஊரான மதுரைக்குச் சென்றனர்.

மூக்கன் உட்பட தொழிலாளர்களுக்கும் கோவையில் செங்கல் சூளைகள் மூடப்பட்டதால், மதுரைக்குச் சென்றனர். சீட்டு நடத்திய சகோதரர்கள் இருவரும் ரூபாய் 50 லட்சம் வரை மோசடி செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் காவல் துறையினர் விசாரித்து மூக்கன் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர இரண்டு ஆண்டுகள் காலக்கெடு விதித்தனர்.

இருப்பினும் சகோதரர்கள் இருவரும் யாருக்கும், பணத்தை திருப்பி தரவில்லை. இதை அடுத்து கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அனுப்பப்பட்டது மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் மயில்சாமி, ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.