குமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் ஊழியர் லஞ்சம் வழக்கில் கைது செய்து, குமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்தாயிரம் ரூபாய் லஞ்சப்பணத்துடன் சிக்கிய மாவட்ட வன பாதுகாவலர் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகம் நாகர்கோவில் அருகே வடசேரியில் உள்ளது. இங்கு வடக்கு தாமரை குளத்தை சேர்ந்த மகாராஜா பிள்ளை என்பவர் தனக்கு சொந்தமான ஹாக்கா வில்லேஜ்க்கு உட்பட்ட குலசேகரபுரத்தில் உள்ள ஐந்தரை சென்று சொத்தில் பணிகள் செய்ய என்ஓசி கேட்டு விண்ணப்பித்து உள்ளார். விண்ணப்பத்தின் படி என்ஓசி அளிக்க பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த சாந்தப்பன் என்பவர் மகன் 56 வயதான பால்ராஜ் என்பவர் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருபவர் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் வைத்து மேற்படி மகாராஜா பிள்ளையை அணுகி ரூபாய் 10,000 தந்தால் உடனடியாக என்ஓசி பெற்று தருவதாக கூறி உள்ளார். இல்லையென்றால் சான்று கிடைக்காது என்று கூறியுள்ளார். அதனால் வேறு வழியின்றி அவரிடம் பேரம் பேசியும் ஒப்புக் கொள்ளாமல் 10,000 ரூபாய் தந்தால் மட்டுமே என் ஒ சி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது மூலம்தான் உயர் அதிகாரிகள் லஞ்ச பணம் பெறுவதாகவும் உயர் அதிகாரிகள் கூறியபடி தான் கேட்பதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் மகாராஜா பிள்ளை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். அவருடைய ஆலோசனையின் படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் பத்தாயிரம் பணத்துடன் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு சென்று மேற்படி பால்ராஜிடம் அவர் கேட்டபடி லஞ்சபணம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து உள்ளனர். இவர் மூலம் தான் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் இந்த லஞ்சப்பணம் தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கூடுதல் விவரங்கள் தெரியவரும். என்ற நிலையில் வனக்காவலர் பால்ராஜ் கைது செய்யப்பட்டனர்.









