• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு..,

ByVelmurugan .M

Oct 25, 2025

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் தீயணைப்பு மற்றும் தடுப்பு பணிகள் அலுவலகம் முன்பு சத்குரு சம்ஹாரா மூர்த்தி சுவாமிகள் ஆலயம் உள்ளது.

இந்த கோயிலில் நேற்று இரவு கோயிலை பராமரிப்பு செய்து வரும் இன்பராஜ் என்பவர் இரவு பூட்டிவிட்டு மறுபடியும் காலையில் கோவிலை திறக்க வந்தபோது கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் மர்ம நபர்கள் கோயிலில் இருந்த பித்தளை வேல் பித்தளை காமாட்சி விளக்கு பித்தளை குத்துவிளக்கு ஆலயத்தில் இருந்த உண்டியலை உடைத்து ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். மொத்தம் 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
.
இந்த ஆலயத்தில் இதுவரை மூன்று முறை திருடு போய் உள்ளது ஆனால் இதுவரையும் காவல்துறை தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை