• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா…

Byகாயத்ரி

Sep 27, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இன்று முதல் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா ஒன்பது நாட்கள் நடைபெறும் என்றும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருள உள்ளார். முதல் நாளான இன்று பெரிய சேஷ வாகனத்தில் மும்மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.