தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக BLA 2, மற்றும்பூத் முகவர்கள் கூட்டம் கிணத்துக்கடவில் உள்ள LJJ. ஜெகன் அவர்களின் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வனிதா துரை முன்னிலை வகித்தார், மேலும் இதில் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் EX MLA, மண்டல தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் கணேஷ் ,மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆனந்த் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கட்சியின் வளர்ச்சிக்காகவும் பூத்து கமிட்டி அமைக்கவும் ,பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை கழகத்திடம் ஒப்படைப்பது மற்றும் ஜனவரியில் மாநாட்டில் கலந்துகொள்வது மாநாடு குறித்தான சுவர் விளம்பரங்கள் ஒட்டுவது உள்ளிட்ட ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவரும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராகிய LJJ. ஜெகன் , மாவட்ட பொருளாளர் வாழை இலை முருகேசன், துணைச் செயலாளர்கள் சுரேஷ், சூலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் தனலட்சுமி ஆனந்த், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மருதப்பன்.,விக்ரம், ஐயாசாமி, மணிகண்டன், கே கே சாமி, மற்றும் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் சரண் பாபு, பேரூர் கழகச் செயலாளர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர்,பாலாஜி, சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயகா பாலு, சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் கந்தசாமி,ஆனைமலை பேரூர் கழகச் செயலாளர் குண சேகரன், சிவக்குமார், கோட்டூர் பேரூர் கழக செயலாளர் அபுதாகிர், வால்பாறை நகர செயலாளர் ரவீந்திரன், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன்,
மகளிர் அணி செயலாளர் அன்னபூரணி, துணை செயலாளர்,மெர்சி,
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ராசு. குறிச்சி மேற்கு பொறுப்பாளர் சின்ன சேட், குறிச்சி கிழக்குப்பகுதி செயலாளர் திரு .ரமணா ஜோசப் மற்றும் ஒன்றியம், நகர,பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என தேமுதிகாவினர் ஏராளமானனோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.