• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பூஸ்டர் டோஸ் இலவசம்- மோடிக்கு ஓ.பி.எஸ் பாராட்டு

ByA.Tamilselvan

Jul 14, 2022

பூஸ்டர்டோஸ் இலவசம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்ச்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் .. கொரோனாவை தடுக்க 18 வயதில் இருந்து 59 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி மையத்தில் நாளை முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை மனதார பாராட்டுகிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாட்டத்தையொட்டி இத்திட்டத்தை அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கை பொது மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். இது இந்திய மக்கள் குறிப்பாக ஏழைகள் மீது நீங்கள் வைத்து இருக்கும் மிகுந்த அக்கறை மற்றும் இரக்கத்தை காட்டுகிறது. அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.