கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா இன்று தொடங்கி வருகின்ற 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
புத்தகத் திருவிழாவை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் BAPASI இணைந்து நடத்தும் 3ஆவது மாபெரும் புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.