மேற்கு தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் தனியார் பள்ளியில் மர்ம நபரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் புகார்,

புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நிபுணர்களை வைத்து சோதனை மேற்கொண்டனர்,
சோதனையின் அடிப்படையில் எந்த முகாந்திரமும் தென்படாததால் இது ஒரு வதந்தி என கண்டறிந்தனர்,
மேலும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம அடையாள மின்னஞ்சலை தேடி வருகின்றனர், இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு சூழல் நிலவியது.
