மாமன்னர் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாக்கூர் கிராமத்தில் இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாமன்னர் மருது சகோதரர்களின் 223 குருபூஜை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தஞ்சையம்பதி எனும் தஞ்சாக்கூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதிருவர்கள் சிலைகளுக்கு கிராம பொதுமக்கள் சார்பாக பால்குடம் நிகழ்ச்சி மற்றும் மாமன்னர் மருது பாண்டியர்கள் இளைஞர் பேரவை சார்பாக ரத்த தானம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.










