விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் தொடங்கி முக்கிய வீதியில் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
இன்று ஜூன் 14 குருதிக்கொடை தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களை காப்பாற்ற அனைவரும் ரத்ததானம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.