புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை என்ற ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31) கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் நடிகர் விஜய் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் ரம்ஜான் வாழ்த்து குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக, இந்த ரமலான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.