விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க ஓ.பி.சி அணியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இராஜபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓ.பி. சி அணியின் மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணன் துரை (எ)ராஜா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ், மாவட்டச் செயலர் கிருபாகரன், தெற்கு நகர தலைவர் பிரேமராஜா, வடக்கு நகர தலைவர் ஜெமினி சுரேஷ், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி, ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஓபிசி மாவட்ட செயலாளர் அவினேஷ் செய்திருந்தார்.