உசிலம்பட்டி அருகே பாஜக, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இணைந்து போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதலை இந்திய இராணுவம் நடத்தியுள்ளது. முன்னதாக இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகையை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கில் உள்ள பாஜக மதுரை மேற்கு மாவட்ட தொழில் முனைவோர் பிரிவு அலுவலகத்தில், பாஜக தொழில் முனைவோர் பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் மற்றும் உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் இணைந்து போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
இதில் போர் காலத்தில் காயமடைந்தவர்களை மீட்பது, குண்டு வீச்சால் ஏற்படும் தீயை கட்டுப்படுத்துவது, போர் காலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது 9 இடங்களில் தாக்குதல் நடத்திய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.