மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2005 முதல் குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறார் .இவரது மனைவி ரத்தினமாலா மற்றும் மகள் ஷாலினி ஆண்ட்ருஸ் லண்டனிலும் மகன் ஜார்ஜ் சாமுவேல் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்தமான இடம் நிலையூர் பெத்தேல் நகரில் உள்ளது. இந்நிலையில் 2016ல் ராஜ்குமார் இறந்துவிட்டர்.

திருப்பரங்குன்றம் அழகர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் குமரேசன் (வயது 46) இவர் நிலையூரில் பழைய இரும்பு கடை தொழில் செய்து வருகிறார். மேலும்பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் லண்டனில் வசிக்கும் ராஜ்குமாரின் மனைவி ரத்தினமாலா தங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் 30 சென்ட் இடம் குமரேசன் பழைய இரும்பு கடை அருகில் உள்ளது.
இந்த இடத்தை 2022 ஆம் வருடம் லண்டனில் இருந்து மதுரைக்கு வந்த ராஜ்குமாரின் மனைவி ரத்தினமாலா மற்றும் அவரது மகள் ஷாலினி ஆண்ட்ரூஸ் ஆகியோர் நிலையூரில் உள்ள இடத்தை பார்க்க வந்தனர்.
அப்போது அந்த இடத்தில் பாஜக பிரமுகர் குமரேசன் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மேலும் தங்கள் மதுரையில் தங்க முடியாத சூழ்நிலையில் அவர்களது உறவினரான தனக்கன்குளம் திருவள்ளுவர் காலனி சேர்ந்த சவரிமுத்து மகன் சகாயராஜ். இவர் தனக்கன் குளம் பகுதியில் கேபில் டிவி தொழில் நடத்தி வருகிறார்.
டாக்டர் ரத்தினமாலா இந்நிலையில் சகாயராஜ்க்கு “பவர்” அதிகார ஆவண பதிவின் மூலம் திருப்பரங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வே எண் 332 /1A1A மற்றும் 332/1B 1 A க்கு கட்டுபட்ட 1 ஏக்கர் 30 சென்ட் இடத்திற்கு “பவர்” பத்திரம் வழங்கினர்.
மேற்படி நிலையூர் இடத்திற்கு சகாயராஜ் சென்றபோது தான் ராஜ்குமாரிடம் 2008ல் குமரேசன் சொத்து கிரயம் பெற்றதாக ஆவணங்கள் உள்ளதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து குமரேசன் தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாக கூறி திருமங்கலம் ஆர்டிஓ நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் வழக்கு தொடர்ந்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி ஆனது.
மேலும் மதுரை உயர்நீதிமன்ற கிளையும் விரைவாக வழக்கை முடித்து இடத்தை சகாயராஜ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சகாயராஜ் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் குறை தீர்ப்பு நாளில் அளித்த புகாரினை தொடர்ந்து விசாரணை செய்த ஆணையர் மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணை செய்ய பரிந்துரை செய்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் குமரேசன் பத்திரப்பதிவு செய்த நாளாக கூறப்படும் 17.09.2008ல் பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆய்வு செய்தபோது ராக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் இருந்தது தெரிய வந்தது .
.அதனை எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில மோசடி போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களின் மூலம் இடத்தை ஆக்கரமிப்பு செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.
வெளிநாட்டு வாழ் இந்தியரின் ஐந்து கோடி மதிப்புள்ள இடத்தை பாஜக பிரமுகர் குமரேசன் ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணங்கள் தயாரித்தன் மூலம்
மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.