நாட்டின் 79 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் வீடுகள் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் அறிவித்திருந்த நிலையில் காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் தொகுதிவாரியாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி மாவட்டத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியை மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், மாநிலத் துணைத் தலைவர் ரத்தினவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை துவங்கி வைத்தனர்.
மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் மாநிலத் துணைத் தலைவர் கணபதி மாநில செயலாளர் துரை சேனாதிபதி, மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகம், மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.