• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாஜக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை – எம். பி. தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி…

ByP.Thangapandi

Mar 30, 2025

மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனில் இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன்.,

மத்தியில் ஆளும் பாஜக நாங்கள் ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என சொல்கிறார்களே தவிர எந்த நன்மையும் செய்யவில்லை.,

ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் 23 ரூபாய் வரை கூட்டியதை பெரிதாய் பார்ப்பதை விட விவசாயிகள் நகை கடன் வைத்தால் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பும் நடைமுறையில் வட்டியை மட்டும் கட்டி ரினிவல் செய்து கொள்ளலாம் என இருந்ததை இப்போது ரிசர்வ் வங்கி மூலமாக வட்டியை மட்டும் கட்டினால் போதாது முதலையும் சேர்த்து கட்ட வேண்டும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர்., இந்த கடுமையான சட்டத்தின் நோக்கம் மத்திய அரசின் நிதிநிலை சரி இல்லை என்பதை காட்டுவதாக புரிந்து கொள்ள முடிகிறது.

இது குறித்த பாராளுமன்றத்தில் பேசுவோம், ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கான தொகை உயர்த்தியுள்ளது குறித்தும் பேசுவோம், இதற்குண்டான வழிமுறை என்ன என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளிக்க வேண்டும்.

4100 கோடி 100 நாள் வேலை செய்த பணம் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை, 6 மாதங்களாக சம்பளம் இல்லாமல் லட்சக்கணக்கான பெண்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

100 நாள் வேலை திட்டத்திற்கான பணத்தை நியாயமாக கேட்கிறோம், மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது, இதை கண்டித்து தான் தமிழ்நாடு முழுவதும் நேற்று மத்திய அரசை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளோம்.

மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை தமிழ்நாட்டிற்கு கொடுக்கவில்லை என்பதை பாமர மக்கள் நேற்று தான் புரிந்து கொண்டுள்ளனர்.

இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும், கல்விக்கான நிதி, இரயிலுக்கான நிதி, மெட்ரோவிற்கான நிதி போன்ற நிதிகளை முறையாக வழங்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு முதல்வரின் நோக்கம் அதை நாங்கள் நிறைவேற்றுவோம் என பேட்டியளித்தார்.