உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில தேர்தல் முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. இன்று 5 மாநிலங்களில் எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் பாஜக பெரும்பாலான இடங்களை பிடித்து முன்னிலை வகித்து வருகிறது.இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது, “தேசியளவில் பாஜகவுக்கு மாற்று சக்தி என யாரும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் கடுமையான உழைப்பிற்கு ஊதியம் கிடைத்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும். அது 2024 ஆம் ஆண்டிலா அல்லது 2026 ஆம் ஆண்டிலா என்று தெரியவில்லை” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.