பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று மாலை ஏழு மணி அளவில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு வழிபட செல்வதாக வந்திருந்தார்.

அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் வழிபாடு செய்ய காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி என கூறிய நிலையில் இரவு முழுவதுமே மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி பாஜகா நிர்வாகிகளுடன் வேலூர் இப்ராஹிம் தருணாவின் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் கேக் வெட்டி பழனி ஆண்டவர் கோவில் தெரு மக்களிடம் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து வேலூர் இப்ராஹிம் பழனியாண்டவர் கோவில் கோட்டை தெருவில் இருந்து புறப்படும் போது காவல்துறையினர் அவரையும் பாஜக மாவட்ட தலைவர் உட்பட 11 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மலை மீது இருக்கும் தர்காவிற்கு சென்று வழிபட வேண்டுமென காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து தர்ணாவில் ஈடுபட்ட வேலூர் இப்ராஹிமை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




