• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

ByG.Suresh

Mar 25, 2024

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் நேற்று காரில் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்கள் வந்தனர்.

அவருக்கு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் பாஜக, தமாகா, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து தேவநாதன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் அசோகன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து நெரிசல் சிவகங்கை அரண்மனைவாசலில் தேவநாதனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது, மதுரை முக்கு, அரண்மனைவாசல் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதனால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைந்தனர்.

நேற்று முன்தினம் அதிமுக வேட்பாளர் வந்தபோது இதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்தனர். தேர்தல் விதிமுறைகளின்படி செயல்பட்டு, போக்குவரத்தை சீரமைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.