மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறந்த நாளை கொண்டாடினர் .

இந்த ஊர்வலம் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தொடங்கி கவணம்பட்டி சாலை, பேரையூர் சாலை என உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவு செய்தனர்.
இதனை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு முன்னிலையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முருகன் கோவில் அருகில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தந்தை தொல்காப்பியர் நினைவு தினத்தை முன்னிட்டு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பிறந்தநாள் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.