கன்னியாகுமரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள பெரும் தலைவரது திருஉருவ சிலைக்கு தலைவரின் 123_பிறந்த தினத்தின் கொண்டாட்டமாக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு மாநில உணவுத்துறை ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி,17_ வது லார்ட் காங்கிரஸ் உறுப்பினர் ஆனி ரோஸ், முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ்,உட்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும், கல்விக்கண் திறந்த காமராஜர் உருவ படத்துடன் நின்றனர்.

பள்ளிக் குழந்தைகளுடன் அமைச்சர் மனோதங்கராஜ், குமரி ஆட்சியர் அழகு மீனா, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.