• Mon. Feb 9th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் பிறந்தநாள் விழா..,

ByPrabhu Sekar

Feb 8, 2026

பல்லவர் வணிகர் பேரவையின் சார்பில், பல்லவர் பேரரசின் சிறந்த மன்னரான மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விழா, மாமல்லன் நரசிம்மவர்மன் அவர்களின் வீரத்தையும், கலை மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் கௌரவத் தலைவர் மணிமாறன், சங்க ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணு
மாநில துணை தலைவர் சுரேஷ், சங்க துணை ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார், செங்கல்பட்டு மாவட்ட சட்ட ஆலோசகர் ரகுராம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மூர்த்தி, மாவட்டத் தலைவர் ரவி, மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக மாமல்லன் நரசிம்மவர்மன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் சுரேஷ், முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சி காலம் சிறப்பான நிர்வாகத்திற்கும், தமிழரின் கலை மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சிக்கும் முக்கியமான காலமாக இருந்ததாக கூறினார். அவரைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை கொண்டாட நிர்வாகிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் வணிகர் சமூகத்தினர், பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவுகூரும் இந்த விழா, சமூக ஒற்றுமையையும் வரலாற்று விழிப்புணர்வையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.