• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காளைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

ByN.Ravi

May 1, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள்
கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடை
பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து வருகின்றனர். இந்த காளையை அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (35) பராமரித்து வருகிறார். இந்த காளைக்கு இன்றுடன் 7 வயதை எட்டியுள்ள நிலையில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து காளைக்கு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். இந்த காளைக்கு காரி (என்ற) கரிகாலன் என பெயர் சூட்டி ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். இன்றுடன் 7 வயதை எட்டிய நிலையில் எனது வீட்டில் ஒரு பிள்ளையைப் போல் வளர்ந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதர்களுக்கு எவ்வாறு பிறந்தநாள் கொண்டாடுகிறோமோ, அதேபோன்று இந்த ஜல்லிக்கட்டு காளைக்கும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.