• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உலக மோட்டார் சைக்கிள் தினம் மற்றும் மகள் தினம் (செப்டம்பர்24)யில் கன்னியாகுமரி, ஆந்திரமாநிலம் வரை இருசக்கர வாகனப்பயணம்.

கன்னியாகுமரி- ஆந்திரமாநிலம் நெல்லூர், ஆங்கோர், ஹம்சலாதேவி வரை, இந்திய மோட்டார் சைக்கிள் டூர்ஸ் அசோசியேஷன் சார்பில், தேசிய சாதனையை வலியுறுத்தி, மோட்டார் சைக்கிள் குழுவின் தலைவர் ஜாக்சன் பெர்னாண்ட்ஸ் மற்றும் வேபாவி ஆகியோர் தலைமையில் உலக மோட்டார் சைக்கிள் தினமான இன்று 2_பெண்கள், 48,ஆண்கள் அடங்கிய குழுவினர் (இன்று உலக மகள்கள் தினத்தின் அடையாளமாக இரண்டு பெண்கள்)உடனான இந்த குழுவினர் இன்று காலை கன்னியாகுமரியில் தொடங்கி கடற்கரை வழியாகவே தூத்துக்குடி, ராமேஸ்வரம் வழியாக இந்த மோட்டார் சைக்கிள் பயணம் செல்கிறது. இன்று இரவு புதுவை மாநிலம் சென்று இரவு தங்குகிறார்கள்.

நாளை காலை பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டு 1,600 கி.மீ தூரத்தை கடந்து ஹம்சலா தேவியில் நிறைவடைவதாக குழுவின் தலைவர் ஜாக்சன் பெர்னாண்ட்ஸ்.கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.